சிவபுரம் ஆதீனம்

முகப்பு

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி கிராமம் அருகே சிவபுரம் ஆதீனம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாவது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி உள்ளார். அருள்மிகு சிவகுருநாதர் உடனமர் அழகாம்பிகை திருக்கோயிலும் சிவபுரத்தில் சிறப்புற அமையப்பெற்றுள்ளது. சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவாசகம் முற்றோதல் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் உரிய முறையில் காலந்தவறாமல் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக நிகழ்வுகளிலும், கோவிலில் அன்றாடம் நடைபெறும் மூன்று கால பூஜைகளிலும் சிவபுரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் நகரில் உள்ள சிவனடியார்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆன்மீக அருள் பெற்றுச் செல்கின்றனர்.

imac

ஆதீனம்

நிகழ்வுகள்

சிவபுரம் ஆதீனம்மடத்தில் வருடம் தோறும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திரம், நவராத்திரி, ஆனிதிருமஞ்சனம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர மாதம் தோறும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை. திருவாசக முற்றோதல், ஸ்ரீ கால பைரவர் யாகம், பௌர்ணமி சிறப்பு அபிஷேக அலங்காரம் , அமாவாசை அன்னதானம் போன்றவையும் இறையருளுடன் நடைபெற்று வருகின்றன.